Saturday, September 17, 2011

அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு அஸ்கிரி பீடாதிபதி பாராட்டு

முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்தரகாளி அம்மன் ஆலயத்தில் நடத்தப்பட இருந்த மிருக பலி பூஜைகளை தடுத்து நிறுத்தியமைக்காக அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு கண்டி அஸ்கிரி பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்த ரக்கித தேரர் பாராட்டு தெரிவித்துள்ளார். மிருகங்களைக் கொடூரமாக பலியிடும் இவ்வறான வழிபாடுகள் தடுக்கப்பட வேண்டுமென அஸ்கிரி பீடாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஊடகச் செயலாளர் ரொஹான் விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மிருகங்களை பலியிடும் இடங்களுக்கு தெய்வங்கள் எழுந்தருளுவதில்லை எனவும், இவ்வாறான இடங்களில் அருள் கிடைக்கும் என செல்லும் பக்தர்கள் மூட நம்பிக்கையுடையவர்களாகவே கருதப்பட வேண்டியவர்கள் அஸ்கிரி பீடாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முன்னேஸ்வரம் ஆலயத்தில் நடைபெறவிருந்த மிருக பலி வழிபாடுகளை அமைச்சர் மேர்வின் சில்வா தடுத்து நிறுத்தியதுடன், பலியிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பல ஆடுகளையும் கோழிகளையும் அமைச்சர் மீட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் ஹம்பகா பிரதேசத்தில் கணப்படும் மாட்டு இறைச்சி வெட்டும் கடைகளை மூடுமாறும், பிரதேசங்களில் மாடு அறுப்பதை நிறுத்துமாறும் மேவின் உத்தரவிட்டுள்ளார். இலங்கை பூராகவும் மாடுகள் அறுக்கப்படுவதை தடுப்பதற்கு தான் முழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment