Thursday, September 8, 2011

இலங்கை போர்: தோல்வியில் முடிந்த அமெரிக்காவின் முயற்சிகள்!

இலங்கை போரின் இறுதிக் கட்டத்தின்போது அமெரிக்கா மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததாக "விக்கிலீக்ஸ்" செய்தி வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தின்போது பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்காகவும், எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் நடுநிலையாளர் ஒருவரை இலங்கை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

2009 மே 17 ஆம் தேதி, இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதரக அதிகாரி ராபர்ட் ஓ பிளேக், அமெரிக்க அயலுறவ்து துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக் குறிப்பு ஒன்றிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் நிலைமை தொடர்பாக அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், மே 17 ஆம் தேதியன்று,இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச போர் முடிந்து விட்டதாக அறிவித்துள்ளதாகவும், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அதனை மே 19 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அன்றைய நாள் முழுவதும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச,அயலுறவுத் துறை அமைச்சர் ரோகித போகொல்லாகம உள்ளிட்ட இலங்கை அதிகாரிகளுடன் தான் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வலயத்துக்குள் அதிக எண்ணிக்கையான மக்கள் இன்னமும் இருப்பதாக மன்னார் ஆயர் தன்னிடம் தொடர்பு கொண்டு கூறியதாகவும், பிளேக்கின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் எஞ்சியுள்ள புலிகள் சரணடையத் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டதாக நார்வே தூதுவர் தன்னிடம் கூறியதாகவும் பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், எஞ்சியுள்ள போராளிகளை சரணடைவதற்கான நடுநிலையாளர் ஒருவரை ஏற்க வைப்பது தொடர்பாகவே தான் இலங்கை அதிகாரிகளுடன் அன்றைய நாள் முழுவதும் தொடர்பில் இருந்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

மே 17 ம் தேதி அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை நடுநிலையாளராக ஏற்றுக் கொண்டு விடுதலைப் புலிகளை சரணடைவதற்கு ஏற்பாடு செய்ய முன்வருமாறு கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் போர் முடிந்து விட்டது என்று கூறி கோத்தபாய ராஜபக்ச, அந்த நடுநிலை முயற்சியை ஏற்க மறுத்து விட்டதாகவும், ஆனால் சரணடையும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு படையினருக்கு தான் அறுவுறுத்தியிருப்பதாக அவர் கூறியதாகவும் பிளேக் அனுப்பிய குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை அன்றையநாள் போர் வலயத்தில் இருந்து சடலங்களையும். காயமடைந்தவர்களையும் மீட்க அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை அனுமதிக்குமாறு இலங்கை அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவை தான் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

தனது வேண்டுகோளை நிராகரித்த பசில் ராஜபக்ச,இலங்கை அரசாங்கமே அதனைப் பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

2 comments :

varathan ,  September 8, 2011 at 1:20 PM  

விக்கிலீக்ஸ் சொன்னால் அது பெரிய செய்தி. அதாவது தமிழனுக்கும் உலகத்துக்கும் அல்வா. இதைத்தானே நாங்கள் எத்தின தடவை சொன்னநாங்கள்.

புலி சரணடைய உலக நாடுகள் முழுதிட்டையும் கெஞ்சினது. ஆனால் மக்களிட்ட வீரம் பேசினது.

அமெரிக்கா உட்பட மேற்குலகு முழுதும் புலிக்கு ஒட்சிசன் கொடுக்க முற்பட்டது. ஆனால் பிரபாகரனுக்கு அவர்களில் எப்போதும் சந்தேகமே இருந்தது.

Anonymous ,  September 8, 2011 at 4:58 PM  

West believe that it is overroll in charge of the entire countries around the world. what's mutual understanding?We've a clear picture about it,but we wonder what kind of authority is this to poke their noses...........?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com