தேர்தலின் பின் சஜித்தை ஆதரவார்களுடன் ஐ.தே.க யிலிருந்து விரட்ட நடிவடிக்கை.
உள்ளுராட்சி தேர்தல் முடிவடைந்த பிறகு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அவருக்கு நெருக்கமான மேலும் சிலரையும் கட்சியிலிருந்து துரத்தவதற்கு அக்கட்சியின் தலைமைத்துவம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிய வருகிறது.
இது தொடர்பாக இதுவரையில் சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவம் சிரிகொத்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இதன்படி கட்சியின் தலைமைத்தவத்திற்கு எதிராக தன்னிச்சையாக செயற்படும் சஜித் பிரேமதாச உட்பட அவருக்கு நெருக்கமான சிலருக்கு எதிராக எடுக்கக் கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான குற்றச்சாட்டுப் பட்டியலை உடனடியாக தருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவைவர் அந்தக் கட்சியின் பிரபல சட்டத்தரணியிடம் ஆலோசனைக் கேட்டுள்ளார்.
தேவையான ஆலோசனைகளை அந்த சட்டத்தரணி வழங்கியுள்ளதுடன் உள்ளுராட்சி தேர்தல் முடிவடைந்த பிறகு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அவருக்கு நெருக்கமான மேலும் சிலரை கட்சியிலிருந்து துரத்தவதற்கு அக்கட்சியின் தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிய வருகிகிறது.
0 comments :
Post a Comment