உயர்தர பரீட்சை முடிவுகள் நவம்பர் இறுதியில்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளை இம்மாதம் 30 க்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிட பரீட்சைகள் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது. .
இம்முறை நடந்து முடிந்த க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 1 இலட்சத்து 47 ஆயிரத்து 761 பரீட்சாத்திகளும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 1 இலட்சத்து 47 ஆயிரத்து 100 பரீட்சாத்திகளும் தோற்றியுள்ளனர்.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்மை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment