Thursday, September 8, 2011

பெண்னொருவர் கத்தியால் குத்திக் கொலை நீர்கொழும்பில் சம்பவம்.

தனது இரண்டாவது கணவனால் கத்தியால் குத்தப்பட்டு பெண்னொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று புதன் கிழமை இரவு நீர்கொழும்பு நிக்கலஸ் மார்க்கஸ் மாவத்தையில் இடம் பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தாயாரான ரத்தொழுகம, முத்துவாடிய பிரதேசத்தைச் சேர்ந்த கடுபிட்டிகே சந்ராவதி சில்வா (46 வயது) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் இரண்டாவது கணவரான பொல்வத்தை , கனேமுல்லையைச் சேர்ந்த டொன் டன்ஸில் நிக்கலஸ் (67 வயது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் முதலாவது கணவர் மரணமடைந்த பின்னர் அப்பெண் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருடன் கடந்த பத்து வருடகாலமாக சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு சந்தேக நபர் அப்பெண்ணை அழைத்துள்ள போதும் அவர் மறுத்து வந்துள்ளார். இந்நிலையிலேயே சந்தேக நபர் நீர்கொழும்பு நிக்கலஸ் மார்க்கஸ் மாவத்தைக்கு அப்பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சம்பவம் இடம் பெற்ற இடத்திலிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தி ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். சந்தேக நபரை நீதி மன்னறில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com