Saturday, September 17, 2011

கொலைக்களமா, ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்களா? சங்கடத்தில் டச்சு நீதிமன்று

புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார்கள், அவ்வியக்கத்திற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து இலங்கையர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளின் போது அவர்கள் சார்பாக ஆஜராகியுள்ள சட்டத்தரணி சனல் 4 வினால் வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படத்தினை கருத்திலெடுக்குமாறு கூறியுள்ளதுடன் அப்படத்தினை மன்றில் ஒளிபரப்புவதற்கும் அனுமதி கோரியுள்ளார்.

சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விக்டர் கோப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறித்த ஆவணப்படத்தை பரிசீலனை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி குறித்த ஆவணப்படம் இன்றைய தினம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

சந்தேக நபர்கள் பயங்கரவாத இயக்கம் ஒன்றுக்கு பணம் சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டு நிருபணமாகும் சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்டும் நிலையில் தமது கட்சிக்காரர்கள் குற்றமற்றவர்கள் என்ற வாதத்தை முன்வைப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட வீடியோ காட்சியை காண்பிக்க முற்படுவதில் சட்டத்தரணி வெற்றியை பெறுவாரா என்பது கேள்வியாகும்.

இதேவேளை, நெதர்லாந்து நீதிமன்றில் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் போதி அதாவுத தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது இதனை ஒளிபரப்புச் செய்வது பிழையான நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஆவணப்படத்தை காட்சிப்படுத்த வேண்டாம் என உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட பதில் ஆவணப்படத்தை நீதிமன்றில் காட்சிப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com