சர்வதேச ரீதியான தீர்வு சாத்தியப்படாது- ஜனாதிபதி
ஐநா பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையில் நிலவும் பிரச்சனைகளுக்கு சர்வதேச ரீதியில் தீர்வு தேடுவது என்பது சாத்தியமற்ற விடயம் என்று கூறியுள்ளார். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கிலிருந்து கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தை அணுகக்கூடாது என்றும் நியுயோர்க்கில் ஐநா பொதுச்சபையின் 66வது அமர்வில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தொடர்புடைய விடயங்கள்மஹிந்த ராஜபக்ஷதொலை தூரத்திலுள்ள நாடுகளிலிருக்கும் நண்பர்கள், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சிந்தனைப் போக்கை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வரலாற்றின் புதிய தருணத்தில் தாங்கள் சந்தித்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச சமூகத்தின் நட்புறவு மற்றும் நல்லெண்ண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் மகிந்த கூறினார்.
உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வு மூலமே இலங்கைச் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று தமது மக்கள் நம்புவதாக கூறிய மகிந்த, உலகளாவிய ரீதியில் தீர்வை தேட முனைவது யதார்த்தத்தில் சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டார்.
இது தவிர, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்ககூடாது என்றும் ஐநா பொதுச்சபையில் கூறிய இலங்கை ஜனாதிபதி சுற்றுச்சூழல் மாசடைதல், உலகமயமாதல்,சர்வதேச நிதிக்கொள்கைகள் தொடர்பாகவும் இலங்கையின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.
நன்றி பிபிசி
0 comments :
Post a Comment