தமிழரின் போராட்டத்தை இனி கிழடுகள்தான் கையிலெடுக்கவேண்டுமென்கிறார் காதர் நானா!
அரசியல் மறுபிறவி எடுத்துவிட்டதாகக் குதூகலிக்கும் காதரைப்பார்த்து, போராட்டம் மறுபிறவி எடுத்துவிட்டதாகப் புளகாங்கிதமடைகிறது ஜீரீவி. வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மேற்படி காதர், உதிர்த்த முத்துக்களில் சில பின்வருமாறு, இவற்றைப் பொறுக்கத் தமிழரை ஊக்குவிக்கிறது ஜீரீவி.
பெருந்தொகையான இந்தியர்கள் உலகமுழுவதும் வாழ்ந்தாலுங்கூட அவர்கள் ஒன்றுபட்ட ஆக்கசக்தியாக இல்லை. நாமோ, ஓர் ஆக்கசக்தியாக எம்மை உலகிற்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறோம் என்று மார்தட்டும் காதர் அதற்கான அடிப்படை எதுவென அடையாளங்காட்டுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. தங்களை அடையாளப்படுத்தி உலகிற்கே எடுத்துக்காட்ட புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவியது நாட்டில் நடந்த போராட்டமே என சுட்டிக்காட்டிய மேற்படியார், இந்தவகையில் நாம் யூதர்களையும்விட பலமானவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
சரி! இப்பொழுது போராட்டத்தைத் துவக்குவது யார்? பதிலை எம் ஊகத்திற்குவிடாமல் அவரே முடிவெடுத்துச் சொல்கிறார். நாட்டிலுள்ள வயோதிபப் பெண்களதான் போராடவேண்டும். இதற்கு முன்னுதாரணமாக 1977 இல் இமயமலையை அடுத்து இடம்பெற்ற பெண்கள் போராட்டம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார்.
ஆமாம்! வயோதிபப் பெண்கள் எவ்வாறு போராட்டத்திற்கு வலு சேர்க்கலாம்? மிகவும் அரியதொரு காரணத்தை அவரது ஆழ்ந்த சிந்தனை வெளிப்படுத்துகிறது. அதாவது, தாய் தாக்கப்படும்பொழுது மகன் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டானாம். அவன் உடனே வீறுகொண்டு எதிரிகளை அழித்தொழிக்கப் புறப்படுவானாம்.
புலிகளோடு ஆரம்பித்துப் புலிகளோடு முடிந்ததல்ல எமது போராட்டம். திருமலை நடராசன், சார்ல்ஸ் அன்ரனி போன்றவர்களை நாம் மறந்துவிடக்கூடாது என்று எமது ஞாபகசக்திக்கு வேலைகொடுக்கும் காதர், அங்கு போராட்டம் நடந்தால்தான் இங்கு நாம் ஒன்றுபட்ட ஆக்கசக்தியாக உலகிற்கே எம்மை அடையாளப்படுத்தமுடியும் என அழுத்தந் திருத்தமாகக் கூறிமுடிக்கிறார்.
இதில் சுவாரசியமான விடயம் என்னவென்று சொன்னால் காதர் நானாவை ஜிரிவி தொலைக்காட்சிக்கு கொண்டுவந்து புலன்பெயர்ந்த மடமைகளுக்கு அம்புலிமாமா கதை சொல்ல வைத்திருப்பதுதான். யார் புலிகளின் போராட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமைவார்கள் என 24 மணித்தியாலயங்களுள் விரட்டியடிக்கப்பட்டார்களோ அவர்களை கொண்டே தற்போது போராட்ட சித்தாந்தமும் வேதாந்தமும் ஓதப்படுகின்றது. இது எதை குறிக்கின்றதாயின் புலன்பெயர்ந்தோருக்கு பினாமிகள் காட்டிய பூச்சாண்டி எல்லாம் நையாண்டி எங்கிறதை மக்கள் உண்ர்ந்துவிட்டார்கள் என்பதை ஜிரிவி உணர்ந்து விட்டதென்பதையும் தற்போது நாம் சொல்லவில்லை புலிகளின் பரம எதிரிகளாகவிருந்த நானாக்களே சொல்கின்றார்கள் என்றபோது ஒரு சிறிய மாற்றம் வரும் என்ற நப்பாசைதான்.
ஆனால் காதர் நானாவின் தகடு இரண்டுபக்கமும் கூரானது. ஒருபக்கம் ஒப்பறேசன் ஒவர், இப்ப மிஞ்சிக்கிடப்பது தமிழ் கிழடுகள் மாத்திரம்தான், மற்றவையெல்லாம் நாட்டைவிட்டு ஓடிட்டாங்கள், நாங்கள் இலங்கையில இப்போது இரண்டாவது பெரும்பாண்மை என்கின்ற தங்கட மகிழ்ச்சியை சொல்லி தமிழரை நோவடித்து இருக்கிறார். அடுத்தபக்கம் எப்படியாவது மேலுமொரு யுத்தம் இடம்பெற்றால் கல்முனை அம்பாறை பகுதிகளில் தனியான முஸ்லிம் நிர்வாக அலகுகளை பெற்றுக்கொண்டாற்போல் யாழ்பாணம் வவுனியா மன்னாரிலும் பெற்றுக்கொள்ளலாம் என்ற சதி.
இனியென்ன, எங்கள் அம்மாக்களும், மாமிகளும், பாட்டிமாரும், சித்திகளும் போரடடத்தில் இறங்கவேண்டியதுதான் பாக்கி!
வாழ்க தமிழினம்! வளர்க போராட்டம்
0 comments :
Post a Comment