ஜனாதிபதி அமெரிக்கா பயணம்.
ஐ.நா. சபையின் 66 வது அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை நியூயோர்க் சென்றதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஏற்கனவே நியூயோர்க் சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி தனது உரையின்போது தருஸ்மன் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டதற்கான அதிருப்தியையும் கண்டணத்தையும் வெளிவிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஐ.நா வின் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென நடுநிலையாளர்கள் எனக் கூறப்படுகின்ற ஐ.நா வுடன் தொடர்பு பட்டிராக நபர்களின் அறிக்கை எவ்வாறு ஐ.நா வினால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தாபனம் ஒன்று உத்தியோக பூர்வமாக கையாள முடியும் என்ற கேள்வியும் அங்கு எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேநேரம் அமெரிக்காவில் தங்கியிருக்கும் போது ஜனாதிபதி பல்வேறு உத்தியோக பூர்வ சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 66 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் செல்லும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அங்கு சந்தித்துப் பேசவுள்ளார் என புதுடில்லி தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது ஈழத்தமிழர் பிரச்சினை, மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் கலந்துரையாடுவார் எனத் தெரிவித்துள்ள புதுடில்லி, அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கும் திட்டம் எதுவும் மன்மோகன் சிங்கிடம் இல்லை என்றும் கூறியது.
0 comments :
Post a Comment