வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற பெயரில் பாலியல் துஸ்பிரயோகம்
திருமலை மாவட்ட பெற்றோருக்கு சீ.ஐ.டி. அறிவுறுத்தல்
வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாகக் முகவர்களிடம் திருமலை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பெற்றோர் தமது வயது குறைந்த இளம் பிள்ளைகளைக் கையளித்து ஏமாறவேண்டாம் என குற்றப்புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருமலைக்கு செல்லும் வேலைவாய்ப்பு முகவர்கள் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக உறுதிமொழிகளை வழங்கி வயது குறைந்த இளம் பிள்ளைகளை தென்பகுதிக்கு அழைத்துச் சென்று தெஹிவளை மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளில் அவர்களை தங்க வைத்துவிட்டு அவர்களின் வயதுகளை அதிகரித்துக்காட்டி போலியான ஆவணங்களை வழங்கி பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.
அத்துடன் அப்பிள்ளைகளை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய பின்னரே அவர்;களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் திருமலையிலுள்ள பெறறோர் தமது இளம் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக எந்த வேலைவாய்ப்பு முகவர்களிடமும் கையளிக்க வேண்டாம் என குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதிப்பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment