ஆழும்தரப்பின் கையிலேயே கொழும்பு மாநகர சபையும் இருக்க வேண்டுமாம்.
நகர பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் உதவி தேவை. மத்திய அரசாங்கத்துடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டு நகர சபையை வெற்றிகரமாக நடத்த முடியாது என்று கொழும்பு மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொட இன்று தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு தெரிவித்து வருபவருமான முகமட் மஹ்ரூப் மாளிகாவத்தை பிரதேசத்தில் இன்று ஒழுங்கு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மிலிந்த மொரகொட மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,மத்திய அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய கட்சியே கொழும்பு மாநகர சபைக்கு தேவை.மத்திய அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு நகரசபை மக்களுக்கு சேவையாற்ற முடியாது.மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும்.
...............................
1 comments :
மிலிந்த மொரகொட வென்றல் colomboவை விற்றுப்போடுவான் அப்படிப்பட்ட ஊழல்வாதி , மகிந்தர் தான் கவனித்துக் கொள்ள வேணும்
Post a Comment