வடக்கில் ஒரு சிங்களக் குடும்பம் கூட குடியேற்றப் படவில்லையாம்.
முடிந்தால் நிருபியுங்கள் என த.தே.கூ விற்கு பசில் சவால்
அவசரகால சட்டத்தை நீக்கியமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர்கள் இனவாதத்தை உருவாக்கும் வகையில் சபையில் உரையாற்றுகின்றனர் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
அவசரகால சட்டத்தை நீக்கியமை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து நடத்தப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான் வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெறுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இதன் போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெறவில்லை. முடிந்தால் அதனை நிரூபிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு சவால் விடுத்தார்.
...............................
0 comments :
Post a Comment