கம்பஹா மாவட்டத்தில் மாட்டு இறைச்சிக்கு தடை - மேர்வின் சில்வா
கம்பஹா மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதற்கு தடைவிதிக்க உள்ளதாகவும் அப்பாவி மிருகங்களை கொல்லுபவர்களது கைகளை தான் வெட்டப் போவதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனி பாடசாலை ஒன்றில் கணணிப் பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விவசாயதுறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் மாடுகள் நாட்டின் சொத்துக்கள் என்றும் அவற்றை இறைச்சியாக்கி உண்பது மாபெரும் பாவம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
காளி கோவிலில் பலியிடுவதற்கு தயாராக இருந்த ஆடுகள், கோழிகள் போன்றவற்றின் உயிரை காப்பாற்றியதையடுத்து எனக்கு எதிராக தேங்காய்கள் உடைக்கப்பட்டன. யார் தேங்காய் உடைத்தாலும் அது பலனளிக்காது. நான் யாருக்கும் தீங்கு செய்ய்யாதவர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள மாட்டிறைச்சி கடைகளை வெகு விரைவில் மூடுவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை,சர்வதேச ஆங்கிலப் பாடசாலைகளே தனது அடுத்த இலக்கு எனவும் . அந்த பாடசாலைகள் சிங்கள கலாசாரத்தையும் பௌத்த மதநெறி முறைகள், வரலாறு என்பவற்றையும் மறந்து செயற்படுவதாகவும் அமைச்சர் அங்கு கோபாவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment