Thursday, September 1, 2011

வாழைச்சேனையில் ரயில் - டிரக்டர் மோதி விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை பிரதான வீதியின் புனானையிலிருந்து பொத்தனகமவிற்கு செல்லும் வழியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில் பாதையின் 302வது கிலோ மீற்றர் பகுதியில் டிரக்டர் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று காலை 8.28 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் டிரக்டரின் பெட்டியில் சென்ற 61 வயதுடைய மொஹமட் அப்துல் காதர் என்ற ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த டிரக்டரின் சாரதியும் மற்றுமொருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்.ஜீனைட்.எம்.பஹத்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com