ஹிரிபிட்டிய பகுதியில் மூவர் கொலை
ஹோமஹம ஹிரிபிட்டிய பகுதியில் மூவர் கொலை செய்யபட்டுள்ளனர் கடுவெல பகுதியிலுள்ள மதஸ்தலத்தின் பூசகர் ஒருவர், அவரின் மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களமும் மேலும் மூன்று பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பூசகரின் வீட்டிற்குள் வைத்தே இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், தனிப்பட்ட குரோதம் காரணமாக பழிதீர்க்கும் வகையில் இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment