Sunday, September 18, 2011

நகரிலிருந்து மக்களை விரட்டி கே.பி யை அரசு பாதுகாக்கின்றது என்கின்றார் ரணில்

நகர பிரதேசங்களில் உள்ள வீடுகளை அகற்றுவதில்லை என்று அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதியை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசாங்கம் இத்திட்டத்தை தற்காலிகமாகவே இடை நிறுத்தியுள்ளது. எதிர்கட்சியின் கடும் எதிர்ப்பே இதற்கான காரணமாகும்என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

கண்டியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற் சொன்னவாறு குறிப்பிட்டார்.

எதிர்கட்சித் தலைவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பட்டதாவது, கண்டி மேயர் பதவிக்கு மிகப் பொருத்தமானவர் முன்னாள் தியவதன நிலமே நிரஞ்சன் விஜேரத்ன ஆவார். அவர் புலிகளின் தாக்குதலின் பின்னர் தலதா மாளிகையை புனரமைப்பு செய்ய தலைமை வகித்தவராவார். அவர் போன்றவர்களை தோற்கடிப்பதற்கு குரோதத்துடன் செயற்படும் அரசு, புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்த கே.பி. போன்றவர்களை பாதுகாக்கிறது என குற்றச்சாடடு தெரிவித்தார்.

ஆனால் ரணில் புலிகளுடன் தேனிலவு களித்த காலங்களில் புலிகளுக்கு சகல பாதுகாப்பையும் வழங்கியதுடன் பயங்கர ஆயுதங்களையும் நாட்டினுள் கொண்டுவரப்பட்டதும் நினைவு கூரத்தக்கதாகும்

No comments:

Post a Comment