Monday, September 19, 2011

சிறுவர் துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்

சட்டம் முறையாக அமுல்படுத்த முடியாமையே சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் அதிகரிப்தற்குக் காரணமாக அமைந்துள்ளன என்று தேசிய சிறுவர் துஷ்பிரயோக அதிகார சபையின் முன்னாள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். துஷ்பிரயோக அதிகார சபையின் முன்னாள் தலைவரும் களனி பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியருமான ஹரேந்திர சில்வா இது தொடர்பாக தெரிவிக்கையில் சட்டம் எழுத்து மூலம் மட்டும் வரையறுக்கக் கூடாதென்று தெரிவத்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் தாமதமும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன என்று தேசிய சிறுவர் துஷ்பிரயோக அதிகார சபையின் இன்னொரு முன்னாள் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் ஜகத் வெல்லவத்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுவர் துஷ்பிரயோக அதிகார சபையின் தற்போதைய தலைவர் சட்டத்தரணி அனோமா பொன்சேகா . சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிணை வழங்காதிருக்கவும் மரண தண்டனை விதிப்பது தொடர்பிலும் யோசனைகளை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை ஆராய்ந்து பார்ப்பதற்காக சிவில் பாதுகாப்புக் குழுக்களின் ஒத்துழைப்பபைப் பெற்றுக்கொள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஊடாக உரிய தகவல்கள் பெற்றுக் கொண்டதும் நடைமுறைப்படுத்தும் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குறிப்பிட்டார்.

சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில் அதுகுறித்து அதிகபட்ச சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் சிறுவர் பாலியல் வல்லுறவு,சிறுவர் துன்புறுத்தல்கள், சிறுவர் உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment