Monday, September 12, 2011

வரலாற்றில் கறைபடிந்த நாட்களில் இன்றும் ஒன்று.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற்பிரிவு செயலாளர் வாசுதேவா படைத்துறைச் செயலாளர் கண்ணன் மற்றும் கழகத்தின் முக்கிய உறுப்பினர்களான சுபாஸ் ஆனந்தன் உட்பட பல உயிகள் அழிக்கப்பட்டு இன்றுடன் (13.09.2011) 24 ஆண்டுகள். 1987ம்ஆண்டு தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கக்கூடியது என எதிர்பார்க்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்த்தத்தின் பின்னர் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருந்த புளட் இயக்க முக்கியஸ்த்தர்களை காலை வேளையில் திடீரென சந்திக்க சென்ற புலிகளை இயக்க முக்கியஸ்த்தர்கள் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து தமது சகோதர நல்லெண்ணங்களை வெளிப்படுத்தி காலைப்போசன விருந்தளித்து வழினுப்பி வைத்தனர். அன்றைய தினம் பிற்பகலே விருந்துக்கு வரச்சொல்லிச் சென்ற புலிகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்களை தமது சகோதரப் பசிக்கு இரையாக்கி நிரந்தரமாகவே வழியனுப்பிய கோரச்செயல் நடந்து இன்றுடன் 24 ஆண்டுகள் பூர்த்தியாகிண்றது.

இன்று இத்தனை கொலைகளைச் செய்தும் எத்தனையோ இன்னுயிர்களை நம்மினம் இழந்தும் புலிகள் சாதித்தது என்ன? மக்களுக்கான விடுதலை என்று ஓலமிட்டுக்கத்திய புலிகளோ அல்லது அன்றும் இன்றும் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எண்று கூறுபவர்களும் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன?

ஆயிரக்கணக்கான உயிர்கள் கோடிக்கணக்கான சொத்துக்கள் இழக்கப்பட்டு தாய் தகப்பன் இல்லாக் குழந்தைகளையும், கணவனை இழந்து தவிக்கும் விதவைகளையும் உருவாக்கியதே இந்தப் புலிகள் தமிழ் இனத்திற்கு தேடிக்கொடுத்த மகத்தான விடுதலை.


எஸ்.எஸ்.கணேந்திரன்

2 comments :

Anonymous ,  September 15, 2011 at 1:15 PM  

these bodies appears in this photo related with Kattankudy Muslim Mosque murder by LTTE in 1990

Rathan ,  September 15, 2011 at 1:34 PM  

MR.ANONYMOUS இது காத்தான்குடிச் சம்பவமேதான். புலிகளின் முகாமில் நடந்த கொலை ஒன்றை படமெடுக்க ஒருவன் கமறா தூக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று யோசியுங்கள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com