Thursday, September 29, 2011

தமிழ் வர்த்தகர்களை கடத்தி கப்பம்கோரிய இராணுவத்தினருக்கு விளக்கமறியல் தொடர்கிறது.

நீர்கொழும்பு மற்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த தமிழ் வர்த்தகர்கள் இருவரை கடத்திச் சென்று முறையற்ற விதத்தில் தடுத்து வைத்து அந்த வர்தகர்களிடம் ஒருகோடி ரூபாவை கப்பமாக பெற்றுக்கொள்ள முயற்ச்சி செய்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத்தை சேர்ந்த முன்னாள் கோப்ரல்கள் இருவர் உட்பட ஐவருக்கு நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிணை வழங்குவதை
நிராகரித்தார்.

அத்துடன் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து விசாரணை செய்வதற்காக இந்த வழக்கை 2012 ஜனவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அத்திகதி வரை சந்தேக நபர்களை விழக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

பிரதிவாதிகள் 2008 பெப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில், நீர்கொழும்பு கிரீன்ஸ் வீதியை சேர்ந்த வெளிநாட்டு நாணயமாற்று நிலையமொன்றையும் வீடியோ கிளப் ஒன்றையும் நடத்தி வரும் தமிழர் ஒருவரையும் வத்தளை வெலிகமுன வீதியை சேர்ந்த இலத்திரணியல் உபகரணங்களை விற்பனை செய்யும் தமிழ் வர்த்தகர் ஒருவரையும் கப்பம் பெறுவதற்காக கடத்திச் சென்றுள்ளனர். இதில் நீர்கொழும்பை சேர்ந்த வர்தகரிடம் 20 இலட்சம் ரூபாவையும் வத்தளையை சேர்ந்த வாத்தகரிடம் 80 இலட்சம் ரூபாவையும் பிரதிவாதிகள் கப்பமாக கோரியுள்ளனர்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் பிணை கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் கடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க முடியாதெனவும் வழக்கு விசாரணைக்கு தயாராகுமாறும் நீதிபதி குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com