மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா - ஒபாமா
அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது என்று அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமா பேசுகையில், நமது நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகிறது என்றும் பெரும் கடன்சுமையிலிருந்து அமெரிக்கா மீண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் வேலையில்லா திண்டாட்டத்தால் பல லட்சம் பேர் பக்கத்து நாடுகளுக்கு செல்கின்றனர் என்று கூறிய ஒபாமா, தற்போது இவற்றை போக்குவது முக்கியமான அவசியமாக உள்ளது என்றார்.
447 பில்லியன் டாலர் புதிய வேலைவாய்ப்பு சட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன் என்றும் இதன் மூலம் கட்டுமானத்துறை, ஆசிரியர் பணியிடம் உள்ளிட்டவைகளில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ஒபாமா கூறினார்.
மேலும் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஒபாமா, அவர்கள் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கலாம் என்றார்.
0 comments :
Post a Comment