ஏழு இலட்சம் வருடங்களுக்கு முந்திய கல் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு
யாழ்பாணம் வடமராட்சிப் பகுதியில் ஏழு இலட்சம் வருடங்களுக்கு முந்திய பழமைவாய்ந்த பலியோலிதிக் யுகத்தினை சேர்ந்த கல் ஆயுதங்களே கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் பழமை வாய்ந்த கல் ஆயுதங்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டுகின்றார்.
1984 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக குறித்த கல் ஆயுதங்கள் தொல்பொருள் திணைக்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் நுட்பமான தொழிநுட்பத்தினை பயன்படுத்தி இந்த கல் ஆயுதங்கள் செதுக்கப்பட்டுள்ளதாக நிமல் பெரரோ சுட்டிக்காட்டினார்.நாட்டின் மிகவும் பழமைவாய்ந்த இந்த கல் ஆயுதங்கள் அரிய சொத்தாகக் கருதப்படுவதாக தொல்பொருள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment