Friday, September 9, 2011

ஜேவிபி யினுள் மீண்டும் பிளவா?

ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணியினுள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் உயர் மட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மத்திய குழுவிலிருந்து சிலர் விலக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியுள்ளதது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீடத்தின் சில உறுப்பினர்கள் விலக்கப்பட்டள்ளதாக வெளியிடப்படள்ள ஊடக செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை என்றும் அது பொய்யான செய்தி என்றும் தமது கட்சியின் அரசியல் முன்னேற்றத்தை பொறுக்காத சிலர் உருவாக்கியுள்ள விடயம் என்றும் கட்சியின் பிரசாரச் செயலாளர் விஜித்த ஹேரத் அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.

அதேநேரம் ஜேவிபி யிலிருந்து விலகிச்சென்று தற்போது அரசுடன் இணைந்து கொண்டுள்ள விமல் வீரவன்சவிற்கு சார்பான இணைத்தளம் ஒன்று மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீடத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லையா என்பதை எவரேனும் தெரிந்து கொள்ள விரும்பினால், அது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள முடியும் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தின் பின்னர் ஜேவிபி மேலும் பலவீனமுற்றுள்ளது என்பதும் அக்கட்சியின் சிலர் சரத் பொன்சேகாவின் கட்சியில் முக்கிய பதிவிகளில் உள்ளமை கட்சியினுள் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

...............................

No comments:

Post a Comment