Saturday, September 3, 2011

இலங்கையில் சிறுபான்மை பெரும்பாண்மை கிடையாது. அலரி மாளிகையில் ஜனாதிபதி...

இலங்கையில் சிறுபான்மை இனம் என்று ஒன்று கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான இலக்கு தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களை இணங்கச் செய்வதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே தேசம் நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்திக்காக பாடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 60ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரே தேசம், ஒரே நாடு என்ற கோட்பாட்டை நிலைநாட்டுவதற்காக எவருக்கும் கப்பமோ நாட்டின் ஒரு பகுதியையோ கொடுக்கத் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் பிரிவினைவாத சக்திகள் தலைதூக்க எடுக்கும் முயற்சிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிகரமாக முறியடிக்கும் எனவும் அதற்கான ஆற்றல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  September 3, 2011 at 12:32 PM  

Our president's idea is so brilliant,he should try to implement this idea at the earliest.There should not be any minority or majority differences,all the communities should be given the equal rights, equal justice to share and live together.Srilanka needs rainbow communities around the country. some politicians have a tool to play the game that is"We are minorities" for them to survive
and enjoy the maximum until their end.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com