அவசரகால சட்டத்தை நீக்குவதாகக் கூறி அரசாங்கம் ஏமாற்றுகிறது- விஜித்த ஹேரத்
அவசரகால சட்டத்தை நீக்குவதாகக் கூறி அரசாங்கம் பொது மக்களை ஏமாற்றுகிறது என்று ஜே.வி.பி. தெரிவிக்கிறது. இது தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,
அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் முல்லை தீவு ,கிளிநொச்சி மாவட்டங்களில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் இராணுவ முகாம்கள் தொடரந்து செயற்பட்டுக் கொண்டே இருக்கும்.
தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடை சட்டமானது நீதிமன்ற உத்தரவின்றி வீடுகளில் தேடுதல் நடத்த பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் அதிகாரத்தை வழங்குகிறது.
பயங்கரவாத சட்டத்தின் கீழ் பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் ஒப்புதல் வாக்கு மூலம் பெறமுடியும். வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கவும் முடியும். பயங்கரவாத சட்டம் நீடிக்குமானால் மக்கள் விரும்பும் சுதந்திரம் அவர்களுக்குக் கிடைக்காது.
2 comments :
Codemnations cannot make a prosperous
Srilanka,this is what the opposition always does.Better suggestions and ideas to the government are the best tools to create a prosperous Srilanka.
ஜேவிபிக்கு நாய் மாதிரி குலைக்கமட்டும்தான் முடியும் நீக்கனாலும் விமர்சிக்கிறாங்கள் நீக்காட்டியும் விமர்சிக்கிறாங்கள்.
Post a Comment