நாளொன்றுக்கு 88 வீதம் வருடாந்தம் 290000 சட்டவிரோத கருக்கலைப்புக்கள்.
இலங்கையில் வருடாந்தம் 290,000 பேர் கருக் கலைப்புச் செய்கின்றனர் என்றும் நாளாந்தக் கணக்கீட்டில் நோக்கினால் தினமும் 88 பேர் கருக்கலைப்புச் செய்வதாக சமூக சுகாதார வைத்திய நிபுணரான கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிகமாக இவ்வாறு கருக்கலைப்பச் செய்கின்றனர். எமது அண்மையத் தகவலின்படி வருடாந்தம் சுமார் 290,000 பெண்கள் கருக் கலைப்புச் செய்கின்றனர். இவ்ர்களில் பெரும்பாலாளோர் 35 வயதைத் தாண்டியவர்களாகும். இதேவேளை இலங்கையின் வருடாந்த பிறப்பானது 3,80000 ஆகவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தவறான பாலியல் உறவு காரணமாகவே பெரும்பாலானோர் கருச்சிதைவை நாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment