வாகனப்புகையை 6 மணி நேரம் சுவாசித்தால் மாரடைப்பு ஏற்படும். மருத்துவ நிபுணர்கள்
வீதிகளில் வாகன நெரிசலின் போது வெளிப்படும் கனமான வாகனப்புகையை சுவாசிப்பது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக பிரித்தானிய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வாகனப்புகையை சுமார் 6 மணித்தியாலங்கள் சுவாசிப்பதால் இவ்வாறு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக மேற்படி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த வாகனப்புகை ஆயுட்காலத்தையும் குறைக்கும் அபாயமுடையதாகும் இந்த ஆய்வுக்கான நிதி வசதிகளை வழங்கிய பிரித்தானிய இருதய மன்றத்தின் இணை மருத்துவ பணிப்பாளர் பேராசிரியர் ஜெரோமி பியர்ஸன் விபரிக்கையில் பரந்தளவிலான வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 6மணித்தியாலங்கள் வாகனப்புகையை சுவாசிப்பதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் தற்காலிகமாக அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.
அதனால் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாகன நெருசல் மிகுந்த இடங்களில் அதிகளவு நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார். பிரித்தானியா மற்றும் வேல்ஸை சேர்ந்த மாரடைப்புக்குள்ளான 80,000 நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
0 comments :
Post a Comment