6 வயது சிறுவனை பாலியல் வல்லுறவு புரிந்து கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை
ஆறு வயது சிறுவனை பாலியல் வல்லுறவு புரிந்து கொலை செய்து புதைத்த இருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது. நீர்கொழும்பு , மூன்றாவது குரணையை சேர்ந்த ஆசிரி பிரசன்ன சில்வா, நீர்கொழும்பு- கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரிய யூட் நெப்போலியன் பெர்னாந்து ஆகியோருக்கே மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கடோல்கலே, தலாதூவ பிரதேசத்ததை சேர்ந்த நிசான் சஞ்சீவ என்ற சிறுவனே வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்டவனாவான். இச் சம்பவம் 2005 11-1 அன்று கடோல்கலே, தலாதூவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
இச்சிறுவன் வீட்டுக்கு அருகில் உள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது காணாமல் போயுள்ளான். இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர்களுடன் இணைந்து பிரதிவாதிகள் இருவரும் சிறுவனை தேடியுள்ளனர்.
பின்னர் பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்ததை அடுத்து பிரதிவாதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது . குடிபோதையில் இருந்த பிரதிவாதிகள் சிறுவனின் கையில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை (பிரேஸ்லட்) முதலில் திருடியதாகவும் பின்னர் சிறுவனை வல்லுறவு புரிந்து கொலை செய்து கடோல்கலே பிரதேசத்தில் உள்ள மயான பூமியில் புதைத்ததாகவும் பொலிஸாருக்கு வாக்கு மூலமளித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment