Friday, September 2, 2011

இலங்கையில் 5879 யானைகள்

இலங்கையில் தற்போது 5879 யானைகள் காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்தது. பத்தரமுல்லை வனஜீவராசிகள் பராமரிப்பு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில், இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

1108 யானைக் குட்டிகளும், 122 தந்தத்துடன் கூடிய யானைகளும் காணப்படுவதாக வனஜீவராசிகள் பராமரிப்பு திணைக்கள அதிகாரிகள் அங்கு தெரிவித்தனர் .

இலங்கையில் காணப்படும் யானைகள தொடர்பான கணக்கெடுப்பு அணமையில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com