ஆப்ரிக்கா நாடான புருண்டி பாரில் தாக்குதல் குண்டு பாய்ந்து 36 பேர் பலி
ஆப்ரிக்காவின் கிழக்கு பகுதியில் காங்கோவை ஒட்டி உள்ள புருண்டி தலைநகர் புஜூம்புரா அருகே மது பார் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 36 பேர் பலியாயினர். புஜும்புரா அருகே உள்ள கதும்பா என்ற இடத்தில் Ôசெஸ் லெஸ் அமிஸ் என்ற மது பாருக்குள் நேற்று ராணுவ சீருடை அணிந்த ஒரு குழுவினர் நுழைந்தனர். உடனடியாக அவர்கள் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர்.
பத்துக்கும் மேற்பட்டவர்கள் ராணுவ சீருடையுடன் பாருக்குள் நுழைந்தனர். அங்கிருந்த அனைவரையும் தரையில் படுக்கச் சொல்லிவிட்டு துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்ÕÕ என இச்சம்பவத்தில் உயிர் தப்பிய ஒருவர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் 36 பேர் பலியாயினர். இதுகுறித்து மருத்துவர் லியோனார்டு கூறுகையில், ÔÔஇட நெருக்கடி காரணமாக இறந்தவர்களின் உடல்கள் கார் நிறுத்தும் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. போதுமான ரத்தம் மற்றும் கருவிகள் இல்லாததால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளதுÕÕ என்றார்.
இதை அறிந்த அந்நாட்டு அதிபர் பீர் குருன்சிசா தனது நியூயார்க் பயணத்தை ரத்து செய்துவிட்டு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். புருண்டியில் இரு பிரிவினரிடையே கடந்த பல ஆண்டாக சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 3 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment