Thursday, September 22, 2011

கொழும்பு குடிசைவாசிகளுக்கு 35ஆயிரம் வீடுகள்-பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய

கொழும்பு நகரில் மேற் கொள்ளவுள்ள அபிவிருத்தி வேலைதிட்டத்தின் கீழ் குடிசைவாசிகளுக்கு அரசாங்கத்தால் வீடு கட்டிகொடுப்பதற்கு பத்தாயிரம் கோடி ரூபா செலவிடப்படும் எனவும் தலா ஒவ்வொன்றும் 10 இலட்சம் பெறுமதியான 35 ஆயிரம் வீடுகள் வீடு கட்டிகொடுப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முஸ்லீம் சமூகத்தினரை சந்தித்த நிகழ்வொன்றிலேயே இதனை பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார் அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

அமைக்கப்படவுள்ள 35 ஆயிரம் வீடுகளும் சகல வசதிகளுடனும் கூடியதாகும்.12மாடிகளை கொண்ட ஒவ்வொரு கட்டடத்திலும் உள்ள வீடுகள் ஒவ்வொன்றிற்கும் வேறு வேறாக அறைகளும் வரவேற்பறையும் குளியலறையும் உள்ளடங்களாக சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

அந்ந தொடர்மாடி வேலைதிட்டத்தின் வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த தொடர்மாடி வீடுகளுக்கு மின்சாரம் ஜெனரேட்டர் வசதிகளும் செய்து கொடுக்கப்படும். தனித் தனியாக மானிகள் பெருத்தப்படும்.

முடுக்கு (தோட்டங்கள்) எண்ணக்கரு முற்றாக நீக்கப்பட்டு குடிசைவாசிகள் எல்லோரும் சுதந்திரமாக வாழ்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதுமட்டுமன்றி கொழும்பு நகரில் வசிக்கின்ற முஸ்லீம் மக்கள் உட்பட எந்தவொரு குடிசைவாசிகளும் கொழும்பு பிரதேசத்தில் இருந்து வெளியே குடியமர்த்தப்படவே வெளியேற்றப்படவோமாட்டார்கள்.

உலக வங்கியின் கடன் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரச காணிகள் வர்தகதத்திற்கு வழங்கப்படுவதால் கிடைக்கும் நிதி ஆகியவற்றை பயன்படுத்தி அந்த வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. திறைசேரியில் இருந்து இத்திட்டத்திற்கு நிதிபெறப்படமாட்டாது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கொழும்பு அபிவிருத்தி வேலை திட்டத்தின் கீழ் இந்த வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களாகின்றன என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment