இலங்கை பிரஜை ஒவ்வொருவரும் 345,000 ரூபா கடனாளியாக்கப்பட்டுள்ளனர். UNP
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அரசாங்கம் வெற்றிபெற்றால் தேர்தலில் பின்னர் தொடர்ந்து வரும் நாட்களில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும். அரசாங்கம் தான் நினைத்ததையெல்லாம் செய்யும். மக்களின் பொருளாதார சுமை அதிகரிக்கும் தற்போது ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் 3 இலட்சத்து 45ஆயிரம் ரூபா கடனாளியாக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை மாவட்ட ஐ.தே.க பாராழுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாந்து கூறினார்.
நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐ.தே.க.வின் சார்பில் ஒன்பதாம் இலக்கத்தில் போட்டியிடும் கிஹான் பெர்னாந்துவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
பெரியமுல்லை, அபேசிங்கபுர பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இப்பிரசார கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன , ஜோசப் மைக்கல் பெரேரா, மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீநாத் பெரேரா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்
பாராழுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாந்து அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, இந்த தேர்தல் மிக முக்கியமானது இந்த தேர்தலின் பின்னர் நீண்ட காலத்திற்கு தேர்தல் நடைபெற மாட்டாது பகுதி பகுதியாக தேர்தலை நடாத்தி விட்டு இறுதிக்கட்டமாகவே முக்கியமான சபைகளுக்கான தேர்தலை நடாத்துகிறார்கள்.
அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பு குறைவான உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலே இறுதியாக நடாத்தப்படுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறமுடியாது. தேர்தலின் பின்னர் எமது நாட்டில் எத்தனை எண்ணிக்கையான புத்திசாலி மக்கள் இருக்கிறார்கள் என்று ஜனாதிபதிக்கு புரிய வரும்.
தப்பித்தவறியாவது அரசாங்கம் வெற்றிபெற்றால் தொடர்ந்து வரும் நாட்களில் பொருட்களின் விலைகள் மலைபோல் உயரும். எமது நாட்டு மக்களுக்கு என்ன செய்தாலும் அவர்கள் எமக்கே வாக்களிப்பார்கள் என்று அரசாங்கம் கருதி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும்.
அரசாங்கம் நினைத்ததையெல்லாம் செய்யும், எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து மக்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் அப்போதே அரசாங்கம் பாடம் படிக்கும் பிரபாகரனை ஒழித்த அரசாங்கத்தால் கிறீஸ் பூதம்களை ஒழிக்க முடியவில்லை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தில வெற்றி பெற்றாலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதிலும் உலக அபிப்பிராயத்தை பெறுவதிலும் வெற்றிபெறவில்லை என்றார்.
வேட்பாளர் கிஹான் பெர்நாந்து அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது நிர்கொழம்பு நகரில் தற்போது வீதிகள் புணரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தெருக்களும் ஒழுங்கைகளும் கார்பட் இடப்பட்டும், கொங்கிறீற் போடப்பட்டும் புணரமைப்பு செய்யப்பட்டு வருவது ஆச்சரியத்தை தருவதாக உள்ளது இவற்றுக்காக வீதிகளை புனரமைப்பு செய்யும் போர்வையில் பிரதேச அரசியல் தலைவர்கள் பணத்தை சுருட்டி தேர்தல் பிரசார கூட்டம்களுக்கு செலவிடுகிறார்கள்.
நீர்கொழும்பு வாழ் முஸ்லிம் மக்களதும் தமிழ் மக்களினதும் ஆதரவு எமக்கு
மிக அதிகமாக உள்ளது. அவர்கள் இன மத பேதமின்றி என்னுடன் இணைந்துள்ளனர். நான் தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இறக்க வேண்டும் என்றார்.
பாராழுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கூறுகையில் நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போதைவஸ்து வியாபாரிகள், கடத்தல்காரர்கள் பாதாள உலகத்தினர், சட்டவிரோத நடடிக்கையில் ஈடுபட்டுள்ளோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பில் சகல இன மக்களும் வாழ்கின்றனர் ஆனால் இங்கு விபசார விடுதிகளும் மசாச் கிளப்களும் நிறைந்துள்ளன, கப்பம் பெறப்படுகின்றன ஆட்சியாளர்களும் அவர்களது கையாட்களுமே இதனை மேற்கொள்கின்றனர்.
தையல் இயந்திரம் கோழிக்குஞ்சுகள் மீன்பிடி உபகரணங்கள், சைக்கிள் என்பவற்றை கொடுத்து வாக்குகளை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யாழ்ப்பாண மக்களைப்போன்று நீர்கொழும்பு மக்களையும் இவைகளை கொடுத்து ஏமாற்ற முடியாது என்றார்.
0 comments :
Post a Comment