Saturday, September 10, 2011

லிபியா சண்டையில் 30 ஆயிரம் பேர் பலி

லிபியாவில் கடந்த ஆறு மாதத்தில் நடந்த சண்டையில், 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. லிபியாவில், அதன் தலைவர் கடாபிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களை ஒடுக்க கடாபி படைகள் விமான தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தின. இந்த சண்டையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகவும், 50 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அந்நாட்டின் இடைக்கால சுகாதார அமைச்சர் நாஜி பர்கத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பர்கத் மேலும் குறிப்பிடுகையில், "மருத்துவமனை மற்றும் மசூதி நிர்வாகிகள் கொடுத்த தகவலின் பேரில், 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் 4 ஆயிரம் பேரை காணவில்லை. சிறையில் இருந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடாபி ராணுவம் பலரை கொன்று புதைத்துள்ளது. புதைக்கப்பட்ட இடங்களை மீண்டும் தோண்டி கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. எனவே, இந்த ஆறு மாதத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். கடாபி ராணுவ வீரர்களே 9 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர். அதிருப்தியாளர்கள் தரப்பில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 900 பேர் கை, கால்களை இழந்துள்ளனர்' என்றார்.

நைஜீரியாவில் தஞ்சமா? : மறுக்கிறார் கடாபி

நைஜீரியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படும் செய்தியை, லிபிய மாஜி தலைவர் கடாபி மறுத்துள்ளார். அதிருப்தியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள், கடாபி ஆதரவு ராணுவத்துக்கு எதிராக சண்டையிட்டன. அவரது மாளிகைகள் தகர்க்கப்பட்டுள்ளன. இதனால், கடாபியும் அவரது மகன்களும் தலைமறைவாகியுள்ளனர். அண்டை நாடான நைஜீரியாவில் கடாபி தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்த செய்தியை அவரது ஆதரவு "டிவி' மறுத்துள்ளது. கடாபியின் பேச்சை இந்த "டிவி' சேனல் ஒலிபரப்பியது. "என்னுடைய மூதாதையர் நாடான லிபியாவைவிட்டு ஒரு போதும் வெளியேற மாட்டேன். என்னுடைய அதிருப்தியாளர்கள் வஞ்சகம் செய்து கூலிபடையினரின் துணை கொண்டு என்னை ஆட்சியிலிருந்து இறக்கியுள்ளனர். அவர்களுக்கு எதிராக நாங்கள் மீண்டும் போரிட தயாராக உள்ளோம்' என, தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  September 10, 2011 at 5:13 PM  

The criminal minded performers are behind the stage and the cause of of the death of more than 30,000 civilians.The severely injured are still unaccounted for.The blood thirsty rebels,infamous west and Nato are on action in order make a
sovereign state into a blood streaming country next to Afghanistan ,Iraq and so on.Only God knows! which are the countries are next in their list.....?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com