3000 பட்டதாரிகளை நியமிக்க போட்டிப் பரீட்சை
ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரசாங்கம் மேலும் 3000 பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
கொழும்பில் 90 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இப்போட்டிப் பரீட்சையில் 14500 பட்டதாரிகள் தோற்றுவதுடன் இவர்களில் 3000 பேரை தேர்ந்தெடுத்து ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
இவர்கள் நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பாடசாலைகள் உட்பட கல்வியமைச்சின் கீழ் இயங்கும் வெற்றிடமுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
0 comments :
Post a Comment