யாழ் கொழும்பு பஸ்சேவையில் 30 பஸ்கள் அனுமதிப்பத்திரமற்றவை - கெமுனு
கொழும்பு - யாழ்ப்பாணம் பயணிகள் பஸ் போக்குவரத்து சேவையில் சொகுசு மற்றும் அதி சொகுசு சேவையில் வீதி அனுமதிப் பத்திரமின்றி முப்பது பஸ்கள் வரை தொடர்ந்தும் சேவையில் ஈடுபட்டுள்ளன. இந்த சட்டவிரோத பஸ் சேவை தொடர்பாக தேடிப் பார்த்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தொடர்ந்து குறிப்பிடுகையில், இன்று யாழ்ப்பாணம் -கொழும்பு பஸ் சேவை குளறுபடியான நிலையில் உள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முறையற்ற ரீதியில் அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளமையினால் அரசாங்கத்திற்கு வருடத்திற்கு 200 கோடி ரூபா கிடைக்காமல் போகிறது.
இது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது கவலை தரும் விடயமாகும்.
1 comments :
Ignorance,corruption,bribery,misadmin-istration and sabotage are the cause for a downfall of any government.We anxiously look for a prosperous Srilanka.
Post a Comment