தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பணம் 27 இலட்சம் ரூபா கொள்ளை.
நாவலப்பிட்டி நாகஸ்தென்ன மற்றும் கந்தல்ஓய தோட்டங்களின் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்கவதற்காக நாவலப்பிட்டி வங்கியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 27 இலட்சம் ரூபா சம்பளப் பணம் ரிவர்ஸ் வளைவில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் மூவர் மோட்டார் சைக்கிளில் பணத்தைக் கொண்டு செல்லும் போது ஆயுதம் தாங்கிய குழுவினர் அவர்களை நிறுத்திபணத்தை கொள்ளையிட்டு விட்டு தொழிலாளர்களின் மோட்டார் சைக்கிள்களிலேயே தப்பிச் சென்றுள்ளதாகவும் பின்னர் மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment