Wednesday, September 7, 2011

யாழ்ப்பாணத்தில் 27, 000 படையினரே இருக்கின்றனர் என்கின்றது அரசாங்கம்.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க கூறுவதைப்போல யாழ்ப்பாணத்தில் 50,000 படையினர் இல்லை எனவும் முப்படையினரைச் சேர்ந்த 27,000 பேரே இருக்கின்றனர் என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை எதிர்க் கட்சி தலைவர் றணில் விக்கிரமசிங்க விடுத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

முன்னதாக உரையாற்றிய றணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் படையினர் இருக்கின்றனர், ரோந்து சேவைகள் தொடருகின்றன, அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன இவ்வாறான நிலையில் கிறீஸ் மனிதனை ஏன் கைது செய்ய முடியவில்லை என வினவினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, யாழில் 50 ஆயிரம் படையினர் இருக்கின்றனர் என்று கூறுவது அவமானப்படுத்தும் செயலாகும், அங்கு இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அடங்கலாக 27 ஆயிரம் படையினரே இருக்கின்றனர்.

No comments:

Post a Comment