தலிபான்கள் நிபந்தனை: 25 சிறுவர்களின் கதி என்ன?
இஸ்லாமாபாத்: "நாங்கள் பிடித்து வைத்துள்ள, 25 சிறுவர்களையும் விடுவிக்க வேண்டுமென்றால், பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ள அனைத்து தலிபான் பயங்கரவாதிகளையும் விடுவிக்க வேண்டும்' என, பாகிஸ்தானி தலிபான்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஜாவுர் பழங்குடியினப் பகுதியிலிருந்து, 25 சிறுவர்களை ஆப்கானிஸ்தானின், குனார் மாகாணத்தின் பாகிஸ்தானி தலிபான்கள் சமீபத்தில் பிடித்துச் சென்றனர். சிறுவர்களை விடுவிப்பது குறித்து, தலிபான்களுடன் பழங்குடியினத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்நிலையில், "பாகிஸ்தான் அரசு, சிறையில் வைத்துள்ள அனைத்து தலிபான் பயங்கரவாதிகளையும் விடுவிக்க வேண்டும். பழங்குடியினங்கள் அனைத்தும், அரசுக்கு அளித்து வரும் ஆதரவையும் வாபஸ் பெற வேண்டும்' என, பாகிஸ்தானி தலிபான் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
0 comments :
Post a Comment