Monday, September 12, 2011

யுத்தம் காரணமாக 23287 படையினர் அங்கவீனம்

யுத்தம் காரணமாக 23287 படையினர் ஊனமுற்றுள்ளதாகவும்; 3307 பேரின் வீடுவாசல் இல்லாமல் போனதாகவும் அமைச்சர் திணேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஊனமுற்றவர்களில் 21327 பேர் இராணுவத்ததைச் சேர்ந்தவர்கள் என்றும் 430 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்க்ள் என்றும் 234 பேர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் 1296 பேர் பொலிஸ் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஊனமுற்ற படையினரில் 3307 பேருக்கு வீடுகள் நிர்மாணித்தக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் திணேஷ் குணவர்தன அங்கு மேலும் குறிப்பிட்டார்.

இதன் போது குறுக்கிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 3307 வீடுகளைக் கட்டிக் கொடுக்க ஆறு ஆண்டுகள் சென்றன. 18000 வீடுகளைக் கட்ட இன்னும் எத்தனை ஆண்டுகளாகும் ? என்று கேட்டார்.

'நீங்கள் பதட்டமடைய வேண்டாம். யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடமே ஆகிறது.அரசாங்கத்தின் காலம் நிறைவடைய முன்னர் வீடுகளைக் கட்டிக் கொடுப்போம்' என்று அமைச்சர் திணேஷ் குணவர்தன அதற்குப் பதிலளித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com