2012 ஆம் ஆண்டுக்குரிய இலவச பாட நூல் விநியோகம்.
அடுத்த ஆண்டுக்கான பாடசாலை இலவச பாட நூல் விநியோக நடவடிக்கை இம் மாத இறுதியில் மேற்கொளள்ளப்பட உள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2012 ஆம் ஆண்டுக்குரிய 6.5 மில்லியன் இலவச பாட நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்காக 630 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளதாகவும், சகல வகுப்புக்களுக்கும் உரிய 437 வகையான பாட நூல்களின் விநியோக நடவடிக்கை இந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய உள்ளதாகவும் 514 வகையான ஆசிரியர் கை நூல்களையும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment