20 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் - விரிவுரையாளர்கள் சங்கம்
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது கட்டாயம் 20 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மஹீம் மென்டிஸ் தெரிவித்தார். சம்பளப் பிரசசினை தொடர்பான பிரச்சினை ஏற்பட்ட போது ஜனாதிபதி மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஆகியோர் இது தொடர்பாக வாக்குறுதி அளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்திருப்பதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வீடமைப்புக் கடன் உட்பட மேலும் பல வரப்பிரசாதங்களை பெற்றுத் தருவதற்று அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாகவும் , வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமது உரிமைகளை வெற்றி கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மஹீம் மென்டிஸ் மேலும் தெரிவித்தார்.
...
0 comments :
Post a Comment