ரஷ்யா போர் விமானம் நொறுங்கியது: 2 விமானிகள் பலி
ரஷ்யாவின் போர் விமானம் நொறுங்கியதில் 2 விமானிகள் மரணம் அடைந்தனர். இன்று இந்த விபத்து ஏற்பட்டது. பெர்ம் பிராந்தியத்தின் ராணுவ விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அது விபத்துக்குள்ளானது. இதனை ரஷ்யா அரசின் செய்தி நிறுவனமான ரியா நோவஸ்டி தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் வழக்கமான பயிற்சிக்கு பயன்படும் விமானம் ஆகும். இதே போன்ற ஜெட் விபத்து கடந்த ஆண்டு ஏற்பட்டது. ஆனால் அப்போது பைலட்டுகள் பாராசூட் உதவியுடன் பத்திரமாக தரை இறங்கினர்.
இந்த விபத்தை தொடர்ந்து எம்.ஐ.ஜி 31 ரக விமானங்கள் உடனடியாக தரை இறக்கப்பட்டன. விபத்துக்கான காரணம் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த விமானத்தில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment