18 பேருடன் இந்தோனேசிய விமானம் வீழ்ந்து நொருங்கியது.
இந்தோனீசியாவில் 18 பேருடன் புறப்பட்ட ஒரு சிறிய விமானம் பாதி வழியில் மலைப் பகுதியில் விழுந்து நொறுங் கியதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று சிப்பந்திகள் மற்றும் பயணிகள் 15 பேருடன் அந்த விமானம் நேற்று காலை சுமத்ராவில் உள்ள மேடான் நகரிலிருந்து அருகிலுள்ள அச்சே மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றதாகவும் ஆனால் பாதி வழியில் அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்ட தாகவும் இந்தோனீசிய போக்கு வரத்து அமைச்சின் பேச்சாளர் பம்பாங் எர்வான் கூறினார்.
அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு சற்று முன்பு அந்த விமானி ஆபத்தில் இருப்பதாக சமிக்ஞை அறிவிப்பை அனுப்பியதாகவும் பம்பாங் கூறினார். அந்த விமானம் பஹோரோக் கிராமத்தின் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதை குடியிருப்பாளர்கள் பார்த்ததாக பம்பாங் கூறினார்.
புகை கக்கியவாறு ஒரு விமானம் வட்டமிட்டபடி மிகத் தாழ்வாக பறப்பதைப் பார்த்த தாகவும் அதன் பிறகு அந்த விமானம் தன் பார்வையிலிருந்து மறைந்து விட்டதாகவும் குடி யிருப்பாளர் ஒருவர் கூறினார்.
விமானம் ரேடார் திரை யிலிருந்து மறைந்ததும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். கொட்டும் மழையில் மிகுந்த சிரமப்பட்டு அவர்கள், விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடித்தனர்.
ஒரு மலைப்பகுதியில் அந்த விமானம் விழுந்து கிடப்பதை மீட்புக் குழுவினர் பார்த்தனர். அந்த விமானத்தின் இறக்கைகள் மட்டுமே சேதம் அடைந் திருப்பதால் விமான சிப்பந்திகள் உள்பட அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனை வரும் உயிர் பிழைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும் இதுபற்றிய தகவல் எதுவும் இன்னும் தெரிய வில்லை. இந்தோனீசியாவில் ஹெலி காப்டர் உள்ளிட்ட விமான விபத்துகளும் படகு, ரயில் விபத்துகளும் அடிக்கடி நிகழ் கின்றன. அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏறுவதும் மோசமான பாதுகாப்பு தரங்களுமே இந்த விபத்துகளுக்கு காரணம் என்று இந்தோனீசிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
0 comments :
Post a Comment