மட்டக்களப்பில் பாலமொன்றுக்கு ஜப்பான் 1736 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
மட்டக்களப்பு, படுவான்கரை பிரதேசத்தையும் எழுவான் கரைபிரதேசத்தையும் இணைக்கும் மண்முனை வாவியுடான (தரைவழி) பால வேலைகள் செல்லையா இராசதுரை அமைச்சராக இருந்த காலப்பகுதியில், நிதி ஒதுக்கபட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டு இருந்தது ஆனால் பாதுகாப்பு காரணங்களினால் இவ்வேலைகளை தொடர்வதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்பொழுது ஜப்பான் 1736 மில்லியன் ரூபாய்களளை, இப்பணியை பூர்த்தி செய்வதற்காக வழங்கியுள்ளது. இந்த பாலம் 210 நீளமும் 9.8 அகலமும் கொண்டது. இந்த பாலம் மட்டக்களப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இன்றுவரை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment