Thursday, September 15, 2011

துபாயில் மரணதண்டனையிலிருந்து தப்பிய 17 இந்தியர்கள்

பாகிஸ்தானியர் ஒருவரை கொலை செய்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்கள், 11.5 கோடி பணத்தை அபராதமாக அளித்து தூக்குத் தண்டனையில் இருந்து தப்பித்தனர். ஐக்கிய அரபு சிற்றரசுகளில் ஒன்றான ஷார்ஜாவில், கடந்த 2009ம் ஜனவரி மாதம் பாகிஸ்தானை சேர்ந்த மிஸ்ரி நசீர்கான் என்பவரை 17 இந்தியர்கள் சேர்ந்து கொலை செய்ததாக அறியப்படுகிறது. சட்டத்திற்கு புறம்பான முறை யில் மதுபானம் விற்பது தெடர்பாக எழுந்த தகராறு தொடர்பில் நசீர்கானை, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 16 பேர் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 17 இந்தியர்கள் சேர்ந்து கொலை செய்தனர். இந்த வழக்கில், 17 பேரும் கைது செய்யப்பட்டு, ஷார்ஜா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதன் முடிவில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது, தங்களால் கொலை செய்யப்பட்ட நசீர்கான் குடும்பத்திற்கு 11.5 கோடி பணம் நஷ்டஈடு வழங்குவதாக, குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்ப்டடது. இதற்கு மிஸ்ரி நசீர்கானின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே குற்றவாளி களான 17 பேரும் நஷ்ட ஈடு தொகையான 11.5 கோடி பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தினர்.

இந்தப் பணத்தை, நசீர் கானின் உறவினர் முகமது ரம்சான் என்பவர் பெற்று கொண்டார். ஆயினும், குற்றவாளி கள் அனைவரும் 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் 17 குற்றவாளிகளும் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து விட்டதால், அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் ஒப்புகொண்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com