Wednesday, September 7, 2011

158 பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பராமரிப்புச் செலவு கேட்டு முறைப்பாடு.

பிள்ளைகளிடம் பராமரிப்பச் செலவு கேட்டு 158 பெற்றோர்கள் கடந்த ஏழு மாத காலப்பகுதியில் பராமரிப்புச் சபையிடம் முறைப்பாடு செயதுள்ளதாக சமூக சேவை மற்றும் சமூக சேவைகள் அமைச்சு தெரிவிக்கிறது. பிள்ளைகள் தம்மை கவனிப்பதில்லை என்று செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் 32 முறைப்பாடுகள் சமரசம் செய்யப்பட்டுள்ளதாகவும், 22 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவிக்கிறது.

2010 ஆம் ஆண்டில் இது தொடர்பாக 254 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இந்த வருடத்தில் கடந்த ஏழு மாத காலத்தில் முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும் அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.

முறைப்பாடு செய்துள்ள முதியோர்களின் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் சமூகத்தில் உயர் வகுப்பில் உள்ளவர்கள் என்றும், சிலர் வருமானம் குறைந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

1 comment:

  1. Why not the government follow the social structure of the european countries,helpless elderly people
    always get the benifits from the social department,including the medical care.The children are not targetted at any circumstances,its's purely the duty of the social department of the repective government to provide
    everything to the helpless elderly people.The trained staff of the social department should be kind enough to look into the needs of the helpless elderly people.At times some of them imagine that they pay the money from their own pockets.This mentality should be completely wiped out.

    ReplyDelete