பிரித்தானியாவிலிருந்து மேலும் 150 பேர் நாடுகடத்தப்படுகின்றனர்.
பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்து கோரி விண்ணப்பபித்தவர்களில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக இலங்கையைச் சேர்ந்த மேலும் 150 தமிழர்கள் விரைவில் நாடுகடத்தப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிவிமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை தனியான விமானமொன்றில் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர் என பிரித்தானிய குடிவரவு அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஒரு தொகுதியினர் அண்மையில் பிரித்தானியாவினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டமை தெரிந்ததே.
0 comments :
Post a Comment