ஓக்ரோபர் 15 ஆம் ,16ஆம் திகதிகளில் கொழும்பில் கொரிய மொழிப்பரீட்சை.
கொரிய மொழிப்பரீட்சை எதிர்வரும் ஒக்ரோபர் 15,16 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சை தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளதாவது தென்கொரியாவில் தொழில்புரிவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான கொரிய மொழி தகுதிகாண் பரீட்சை கொழும்பில் எதிர்வரும் ஒக்ரோபர் 15, 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இப்பரீட்சைக்கு 51 ஆயிரத்து 569 பேர் தோற்றுகின்றனர் ஆயினும் 9ஆயிரத்து 300 பேரே பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு
செய்யப்படவுள்ளனர்.
பரிட்சை நிலையத்துக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்ட உபகரணங்கள் தவிர்ந்த வேறு எந்த விதமான உபகரணங்களையும் பரீட்சை மண்டபத்துக்குள் கொண்டுசெல்லவேண்டாம் என்றும் பரீட்சை நிபந்தனைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் பணியகம் பரீட்சாத்திகளை கேட்டுள்ளது.
0 comments :
Post a Comment