14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தடை
இலங்கையில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மிகவும் அவதானமாக செயற்படுமாறு சகல அதிகாரிகளுக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த ஆண்டுக்குள் தொழிலாளர் பிரச்சினைகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக விஷேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் சம்பள நிர்ணயச் சபைகள் ஊடாக தொழிற் பிரிவுகள் பலவற்றின் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்க அடுத்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment