கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐ.தே.க 13 முதல் 17 ஆசனம்களையே பெறுமாம்.
இத்தேர்தலில் எங்களுக்கு சவால் இல்லை- முஜிபுர்ரஹ்மான்
எதிர்வரும் கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐ.தே.கட்சி 13 முதல் 17 ஆசனம்களையே பெற்று தோல்வியடையும் என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தற்போதைய பிரதி மேயர் வேட்பாளருமான அசாத்சாலி குறிப்பிட்டார்.
சக்தி தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பான மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீரங்கா தொகுத்தளித்த இந்த நிகழ்ச்சியில் அசாத்சாலியுடன் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (ஐ.தே.க) ஆகியோர் கலந்து கொண்டனர். அசாத்சாலி தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வரலாற்றில் முதல்தடவையாக கைப்பற்றும் என்றும் குறிப்பிட்டார்.
மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கையில் கடைசியாக இடம்பெற்ற கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிட வில்லை. கண்ணாடிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
ஆனால் இந்த முறை யானைச் சின்னத்திலேயே ஐ.தே.கட்சி போட்டியிடுகிறது எங்களுக்கு எதிர்கட்சியினரால் எந்தவித போட்டியோ, சவாலோ இல்லை நாங்கள் வெற்றி பெறுவோம் கொழும்பு மாநகரில் 70 சதவீதமானோர் வருமானம் குறைந்த மக்களே வாழ்கின்றனர். கொழும்பில் இடம்பெறும் அபிவிருத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் அவர்களை மையப்படுத்தியே நடத்தப்படவேண்டும் என்றார்.
கொழும்பு அபிவிருத்தி என்பது டொரிங்டனையும், காலி வீதியையும் அபிவிருத்தி செய்வதல்ல கொழும்பு அபிவிருத்தி என்பது அங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதாகும். வசதியடைந்த மக்களுக்கு மேலும் வசதிகளை செய்து கொடுப்பதல்ல என்றார்.
0 comments :
Post a Comment