“செப்-11 ” அமெரிக்காவில் தாக்குதல் திட்டம் ; 3 பயங்கரவாதிகள் எங்கே ? உச்சக்கட்ட பாதுகாப்பு
இரட்டை கோபுர நினைவு நாள் ( செப். 11 - 2001 ) அனுஷ்டிக்கவிருக்கும் நேரத்தில் அமெரிக்காவில் கார்குண்டு மூலம் பலத்த தாக்குதல் நடத்திட பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அமெரிக்க அதிகாரிகள் நேரிடையாக ஒத்துக்கொள்ள மறுத்தாலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று மட்டும் சற்று நிமிர்ந்த தோரணையில் கூறி வருகின்றனர்.
10 ஆண்டு முடியும் இந்த தருவாயில் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பிளானில் இடம் பெற்றிருக்கிறதாம். ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதும் அவரது வீட்டில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த விவரம் என்றாலும் தற்போதைய மிரட்டல் எங்கிருந்து வந்தது என்று அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
கடந்த 2001 செப் 11 நடந்த தாக்குதலில் அமெரிக்கா கடும் பாதிப்பையும், அதிர்ச்சியையும் சந்தித்தது. பலரது உயிரை காவு கொடுத்த சம்பவத்தை அடுத்து பயங்கரவாதிகள் ஒழிப்பதே அமெரிக்காவின் முதல் நோக்கம் என்ற வழியில் பின் தொடர்ந்து, ஒசாமா பின்லாடன் வரை பழி தீர்த்து கொன்றாகி விட்டது. இருப்பினும் அல்குவைதா என்றாலே அமெரிக்கா சற்று அதிர்ச்சியடையத்தான் செய்கிறது.
10 வது செப்- 11 நினைவு நாளுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில் இங்கு தாக்குதல் திட்டம் நடத்தவிருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், நம்பத்தகுந்ததாகவும், இருந்தாலும்து உறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் பூசி மெழுகுகின்றனர். இருப்பினும் நியூயார்க், வாஷிங்டன் நகர் முழுவதும் பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மர்ம தகவலில் அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க், வாஷிங்டன் பயங்கரவாதிகள் குறியாக இருக்கும். கார் மற்றும் டிரக்கரில் வெடிகுண்டுகள் நிரப்பி பாலம் மற்றும் சுரங்க பாதைகளில் மோதச்செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திட திட்டம் . இதற்கென ஆப்கனில் இருந்து 2 அல்குவைதா பயங்கரவாதிகளும், அமெரிக்காவை சேர்ந்த ஒருவரும் ஆக மொத்தம் 3 பேர் சேர்ந்து இந்த சதியை நிறைவேற்ற புறப்பட்டு இருப்பதாகவும் இந்த பீதி தகவல் தெரிவிக்கிறது.
இந்த மிரட்டல் குறித்து வெள்ளைமாளிகையில் அதிகாரிகளுடன் அதிபர் ஒபாமா ஆலோசித்தார். ஆனால் வழக்கமான ஆண்டுதோறும் நினைவு நாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விவாதித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். செய்தி தொடர்பாளர் ஜெயர்கார்ன்டு கூறுகையில்; இந்த ரிப்போர்ட் வந்தவுடனே நாங்கள் முழு அளவிலான கவனத்துடன் செயல்படத்துவங்கியிருக்கின்றோம். எல்லா முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தவிதம் என்பதை விளக்க முடியாது என்றார்.
இது குறித்து நியூயார்க் மேயர் மைக்கேல் புளும்பெர்க் கூறுகையில்; உறுதி செய்யப்படாத தகவல் என்று கூறினார் . ஆனாலும் உச்சக்கட்ட பாதுகாப்பு நிலையை அறிவித்துள்ளார். எதற்கான பாதுகாப்பு என்று சொல்ல முடியாது . குறிப்பாக ஆண்டுதோறும் வரும் நினைவு நாளில் சோதனை, பாதுகாப்பு பணிகள் நடப்பது இயல்பான மாற்றம் தான். சிலவற்றை சொல்ல முடியும் சிலவற்றை சொல்ல முடியாது என்றார். பீதி குறித்து புலனாய்வு அதிகாரிகள் ஒரு புறம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.
நன்றி தினமலர்
0 comments :
Post a Comment